31-வது சிங்கப்பூர் இந்தியா கடல்சார் இருதரப்பு பயிற்சி 2024 அக்டோபர் 23 முதல் 29 வரை விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளத்தில் நடத்தப்படுகிறது.
சிங்கப்பூர் குடியரசின் கடற்படைக் கப்பல் ஆர்.எஸ்.எஸ் டெனாசியஸ் ஹெலிகாப்டருடன் பங்கேற்பதற்காக அக்டோபர் 2024 23 அன்று விசாகப்பட்டினம் வந்தடைந்தது.
1994-ம் ஆண்டில் 'எக்சர்சைஸ் லயன் கிங்' என்று தொடங்கப்பட்ட கூட்டுப்பயிற்சியானது இந்திய கடற்படைக்கும் சிங்கப்பூர் குடியரசு கடற்படைக்கும் இடையிலான மிக முக்கியமான இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
இந்த பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் - அக்டோபர் 23 முதல் 25 வரை விசாகப்பட்டினத்தில் துறைமுக பகுதியிலும், வங்காள விரிகுடாவில் அக்டோபர் 28 முதல் 29 வரை கடல் பகுதியிலும் நடைபெற உள்ளது.
0 Comments