ஆண்டுதோறும் லோன்லி பிளானெட்டின் (Lonely Planet) வெளியிடப்படும் பட்டியலில், உலகின் சிறந்த இடங்களை கொண்டாடும் வழக்கம் உள்ளது. அந்த வகையில் இதில் டாப் இடங்களில் புதுச்சேரி 2ம் இடம் பிடித்துள்ளது. மேலும் புதுச்சேரி இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய இடமாகும்.
2025 சிறந்த பயண இடங்கள் பட்டியலில் 30 அற்புதமான இடங்களை நகரங்கள், நாடுகள் மற்றும் பகுதிகள் என வகைப்படுத்தி விரிவாக விளக்குகிறது.
பிரான்ஸின் துலூஸ் (Toulouse) நகரம் நகரங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், புதுச்சேரி இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகத் திகழ்கிறது.
0 Comments