Recent Post

6/recent/ticker-posts

3ம் கட்ட வெம்பக்கோட்டை அகழாய்வில் மணி, காதணி மற்றும் சங்கு வளையல் கண்டெடுப்பு / Finding of bell, earring and conch bracelet in Vembakotta Phase 3 excavation

3ம் கட்ட வெம்பக்கோட்டை அகழாய்வில் மணி, காதணி மற்றும் சங்கு வளையல் கண்டெடுப்பு / Finding of bell, earring and conch bracelet in Vembakotta Phase 3 excavation

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் கடந்த ஜூன் 18-ம் தேதி 3-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது.

இந்த அகழாய்வு பணியில் இதுவரை கண்ணாடி மணிகள், கல்மணிகள், சூது பவள கல் மணிகள், முழுமையான சங்கு வளையல், பழங்கால சிகை அலங்காரத்துடன் கூடிய பெண்ணின் தலைப்பகுதி, கி.பி 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால செப்புக் காசு, அணிகலன்கள், திமிலுடன் கூடிய காளை உருவ பொம்மை உள்ளிட்ட 1,800க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், தற்போது சுடுமண்ணால் ஆன மணி, காதணி, சங்கு வளையல் உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்ட்டுள்ளது. இதன் மூலம் முன்னோர்கள் அலங்கரிக்கப்பட்ட அணிகலன்களை கைகளால் தயாரித்து அணிந்துள்ளது தெரிய வந்துள்ளது என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த அகழாய்வில் இதுவரை 2,395 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel