நமது இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் ஒவ்வொரு மொழிகளைப் பேசி வருகிறார்கள். இந்த மொழிகளைக் காக்க மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இப்போது மத்திய அரசு கூடுதலாக 5 5 இந்திய மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி இப்போது மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழி ஆகிய மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
தற்போது நமது நாட்டில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகள் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது கூடுதலாக 5 மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து பெறும் மொழிகள் எண்ணிக்கை 11 ஆக உயருகிறது.
0 Comments