ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று(அக். 8) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின், 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப். 18, 25, அக்.1) தேர்தல் நடைபெற்றது. அதன்படி வாக்கு எண்ணிக்கையில், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி (இந்தியா கூட்டணி) ஆட்சி அமைக்கிறது.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், பாஜக - 29, மக்கள் ஜனநாயகக் கட்சி - 3, மக்கள் மாநாட்டுக் கட்சி - 1, ஆம் ஆத்மி - 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1 சுயேச்சை - 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது.
ஹரியாணா
ஹரியாணாவில் 90 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த அக். 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக - 50, காங்கிரஸ் - 35, இந்திய தேசிய லோக் தளம் - 2 சுயேச்சை- 3 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
இதையடுத்து ஹரியாணாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. 58 ஆண்டு கால வரலாற்றில் ஒரு கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறையாகும்.
0 Comments