Recent Post

6/recent/ticker-posts

ESTIMATES OF STATE GDP OF TAMIL NADU FOR 2022-23 AND 2023-24 / தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான மதிப்பீடுகள்

ESTIMATES OF STATE GDP OF TAMIL NADU FOR 2022-23 AND 2023-24 / தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான மதிப்பீடுகள்

ESTIMATES OF STATE GDP OF TAMIL NADU FOR 2022-23 AND 2023-24 / தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான மதிப்பீடுகள்

TAMIL

ESTIMATES OF STATE GDP OF TAMIL NADU FOR 2022-23 AND 2023-24 / தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான மதிப்பீடுகள்: தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு மற்றும் நிலையான விலையில் 2022-23 (விரைவுமதிப்பீடு)மற்றும் 2023-24 (முன்மதிப்பீடு) ஆம் ஆண்டுகளுக்குப் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை மதிப்பிட்டுள்ளது.

இந்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்க அமைச்சகத்தால் ஒப்பளிக்கப்பட்ட முறைகள் மற்றும் ஒப்பீட்டுத் தரவுகளைப் பின்பற்றி மதிப்பிட்டுள்ளது.

இந்தத் தரவுகள் அனைத்து மாநிலங்களுடன் ஆண்டு வாரியாக ஒப்பிடத்தக்கவை ஆகும். இவ்வகையில் தமிழ்நாட்டின் சாதனைகளை முந்தைய ஆண்டுகளின் செயல்திறனுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய உதவுகின்றன.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் சிறப்புக்கூறுகள்

ESTIMATES OF STATE GDP OF TAMIL NADU FOR 2022-23 AND 2023-24 / தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான மதிப்பீடுகள்: தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் (விரைவுமதிப்பீடு) ரூ.14,51,929 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.23,93,364 கோடியாகவும், 2023-24 ஆம் ஆண்டில் (முன்மதிப்பீடு) நிலையானவிலையில் ரூ. 15,71,368 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.27,21,571 கோடியாகவும் இருந்தது.

தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2022-23 ஆம் ஆண்டில் 8.13 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 8.23 சதவீதமாகவும் நிலையான விலையில் இருந்தது, அதே நேரத்தில் நடப்பு விலையில் வளர்ச்சி விகிதம் 2022-23 ஆம் ஆண்டில் 15.48 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 13.71 சதவீதமாகவும் இருந்தது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் நடப்பு விலையில் 2022-23 ஆம் ஆண்டில் 8.88 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 9.21 சதவீதமாகவும் இருந்தது. நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் 9.03 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 9.04 சதவீதமாகவும் இருந்தது.

தமிழ்நாடு, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், 2022-23 ஆம் ஆண்டில் நடப்பு விலையில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ளது. நிலையான விலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் உள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்குச் சில மாநிலங்களுக்கான மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகள் வெளியிடப்படாததால் ஒப்பீட்டுத் தரவரிசைகளை மதிப்பிட இயலவில்லை.

அகில இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் 6.99 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 8.15 சதவீதமாகவும் இருந்தது, அதே நேரத்தில் நடப்பு விலையில், வளர்ச்சி விகிதம் 2022-23 ஆம் ஆண்டில் 14.21 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 9.60 சதவீதமாகவும் இருந்தது.

தமிழ்நாட்டின் பணவீக்க விகிதங்கள் 2022-23 ஆம் ஆண்டில் 5.97 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 5.37 சதவீதமாகவும் இருந்தன. இதே காலகட்டத்தில் அகில இந்தியப் பணவீக்க விகிதங்கள் 6.65 சதவீதமாகவும் மற்றும் 5.38 சதவீதமாகவும் இருந்தன.

தமிழ்நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சி விகிதம் நிலையான விலையில் 2012-13 முதல் 2020-21 வரை 5.80 சதவீதமாக இருந்தது. 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான வளர்ச்சி விகிதங்கள் நிலையான விலையில் முறையே 7.89%, 8.13% மற்றும் 8.23% ஆக இருந்தன. இதன் விளைவாக 2012-13 முதல் 2020-21 வரையிலான முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து 2021-22 முதல் 2023-24 முடிய மூன்றாண்டுளில் அடைந்த சராசரி வளர்ச்சி விகிதம் 8.08 சதவீதமாக ஆக உள்ளது.

தமிழ்நாட்டின் தலா வருமானம் நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.1,66,590 ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் ரூ.1,79,732 ஆகவும் இருந்தது. இந்தியாவின் தலா வருமானம் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.99,404 ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் ரூ.1,06,744 ஆகவும் இருந்தது. இவ்விரு ஆண்டுகளில், இந்தியாவின் தலா வருமானத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் தலா வருமானம் 1.68 மடங்காக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு விலையில், தமிழ்நாட்டின் தலா வருமானம் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.2,77,802 ஆகவும் 2023-24 ஆம் ஆண்டில் ரூ.3,15,220 ஆகவும் இருந்தது. அகில இந்தியத் தலா வருமானம் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.1,69,496 ஆகவும் 2023-24 ஆம் ஆண்டில் ரூ.1,84,205 ஆகவும் இருந்தது. எனவே, தமிழ்நாட்டின் தலா வருமானம் 2023-24 ஆம் ஆண்டில் தேசியத் தலா வருமானத்தை விட 1.71 மடங்காக இருந்தது.

தமிழ்நாட்டில் முதன்மைத் துறையின் மொத்த மதிப்புக் கூடுதல், நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.1,50,230 கோடியாகவும், 2023-24ஆம் ஆண்டில் ரூ.1,56,058 கோடியாகவும் இருந்தது. தமிழ்நாட்டின் மொத்த மதிப்புக் கூடுதலில் முதன்மைத் துறையின் பங்களிப்பு 2022-23ல் 11.61 சதவீதமாகவும், 2023-24 ல் 11.18 சதவீதமாகவும் இருந்தது.

கால்நடைத் துறை, முதன்மைத் துறையின் மொத்த மதிப்புக் கூடுதலுக்கு நிலையான விலையில் அளித்த பங்களிப்பு 2022-23 ஆம் ஆண்டில் 48.99 சதவீதமாகவும் மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் 49.03 சதவீதமாகவும் இருந்தது.

மொத்த மதிப்புக் கூடுதலில் இரண்டாம் நிலைத் துறையின் பங்களிப்பு நிலையான விலையில் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் முறையே ரூ.4,83,328 கோடியாகவும் மற்றும் ரூ.5,18,619 கோடியாகவும் இருந்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் மாநில மொத்த மதிப்புக் கூடுதலில் இரண்டாம் நிலைத்துறையின் பங்களிப்பு முறையே 37.36 சதவீதமாகவும், 37.15 சதவீதமாகவும் இருந்தது.

உற்பத்தித் துறை, இரண்டாம் நிலைத் துறைக்கு 65 சதவீதம் பங்களித்து 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் வலுவான வளர்ச்சியைக் கண்டது. உற்பத்தித் துறை, மாநிலமொத்த மதிப்புக் கூடுதலுக்கு அளித்த பங்களிப்பு 2022-23 ஆண்டில் 24.44 சதவீதமாகவும், 2023-24 ஆம்ஆண்டில் 24.10 சதவீதமாகவும் இருந்தது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்களிப்பு, நிலையான விலையில், முறையே 9.29 சதவீதம் மற்றும் 6.37 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பணித் துறையின் மொத்த மதிப்புக் கூடுதல், நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.6,60,230 கோடியும், 2023-24 ஆம் ஆண்டில் ரூ.7,21,309 கோடியும் ஆகும். இந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணித்துறையானது 45.47 சதவீதமும், 45.90 சதவீதமும் பங்களித்தது. 2023-24 ஆம் ஆண்டில் பணித் துறை நிலையான விலையில் 9.25% வளர்ச்சியடைந்துள்ளது. போக்குவரத்து, சேமிப்புகிடங்கு மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் 8.76%, பிறவகை போக்குவரத்துத்துறையில் 7.46%, நிதித் தொடர்பான பணிகளில் 9.29%, கட்டடமனை துறையில் 10.08%, பிறவகைப் பணிகளில் 9.96% என வளர்ச்சிக் காணப்பட்டது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பணித்துறை குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ENGLISH

ESTIMATES OF STATE GDP OF TAMIL NADU FOR 2022-23 AND 2023-24: The Department of Economics and Statistics has estimated the State GDP of Tamil Nadu at current and constant prices for the years 2022-23 (Quick Estimate) and 2023-24 (Preliminary Estimate).

Estimated following the methodology and comparative data approved by the Ministry of Statistics and Planning, Government of India. These data are year-wise comparable across all states. In this way they help in evaluating the achievements of Tamil Nadu in comparison with the performance of previous years.

Features of State GDP Estimates

ESTIMATES OF STATE GDP OF TAMIL NADU FOR 2022-23 AND 2023-24: Tamil Nadu's GDP at constant prices in 2022-23 (quick estimate) will be Rs.14,51,929 crores, at current prices at Rs.23,93,364 crores and in 2023-24 (forecast) at constant prices at Rs. 15,71,368 crore and at current prices it was Rs.27,21,571 crore.

The GDP growth rate of Tamil Nadu was 8.13 percent in 2022-23 and 8.23 ​​percent in 2023-24 at constant prices, while the growth rate at current prices was 15.48 percent in 2022-23 and 13.71 percent in 2023-24.

The ratio of Tamil Nadu's GDP to India's GDP at current prices was 8.88 per cent in 2022-23 and 9.21 per cent in 2023-24. 9.03 per cent in 2022-23 and 9.04 per cent in 2023-24 at constant prices.

Tamil Nadu ranks 2nd in state GDP value in 2022-23 after Maharashtra at current prices. At constant prices, it ranks 3rd after Maharashtra and Gujarat. Comparative rankings could not be estimated as state GDP data for some states for 2023-24 was not released.

The growth rate of All India GDP at constant prices was 6.99 per cent in 2022-23 and 8.15 per cent in 2023-24, while at current prices, the growth rate was 14.21 per cent in 2022-23 and 9.60 per cent in 2023-24. was

Inflation rates for Tamil Nadu were 5.97 percent in 2022-23 and 5.37 percent in 2023-24. All India inflation rates were 6.65 percent and 5.38 percent during the same period.

Tamil Nadu's average economic growth rate at constant prices from 2012-13 to 2020-21 was 5.80 percent. The growth rates for 2021-22, 2022-23 and 2023-24 at constant prices were 7.89%, 8.13% and 8.23% respectively. This has resulted in a significant improvement in the overall economic growth of the state compared to the previous years from 2012-13 to 2020-21, with an average growth rate of 8.08 per cent in the three years from 2021-22 to 2023-24.

Per capita income of Tamil Nadu at constant prices was Rs.1,66,590 in 2022-23 and Rs.1,79,732 in 2023-24. India's per capita income was projected to be Rs 99,404 in 2022-23 and Rs 1,06,744 in 2023-24. It is noteworthy that in these two years, the per capita income of Tamil Nadu is 1.68 times compared to the per capita income of India. At current prices, Tamil Nadu's per capita income would be Rs 2,77,802 in 2022-23 and Rs 3,15,220 in 2023-24. All India per capita income was Rs 1,69,496 in 2022-23 and Rs 1,84,205 in 2023-24. Thus, Tamil Nadu's per capita income was 1.71 times the national per capita income in 2023-24.

Total value addition of the primary sector in Tamil Nadu at constant prices was Rs.1,50,230 crore in 2022-23 and Rs.1,56,058 crore in 2023-24. The contribution of the primary sector to the total value addition of Tamil Nadu was 11.61 percent in 2022-23 and 11.18 percent in 2023-24.

The contribution of livestock sector to the total value addition of the primary sector at constant prices was 48.99 per cent in 2022-23 and 49.03 per cent in 2023-24.

The contribution of the secondary sector to total value addition at constant prices was Rs.4,83,328 crore and Rs.5,18,619 crore in 2022-23 and 2023-24 respectively. The contribution of the secondary sector to the state's total value addition in these two years was 37.36 percent and 37.15 percent respectively.

The manufacturing sector, contributing 65 per cent to the secondary sector, witnessed strong growth in 2022-23 and 2023-24. The contribution of the manufacturing sector to the state's total value addition was 24.44 per cent in 2022-23 and 24.10 per cent in 2023-24. The contribution of the manufacturing sector to the state's GDP, at constant prices, is estimated at 9.29 percent and 6.37 percent, respectively.

The total value addition of the labor sector in Tamil Nadu at constant prices is Rs.6,60,230 crore in 2022-23 and Rs.7,21,309 crore in 2023-24. The labor sector contributed 45.47 percent and 45.90 percent to the state's GDP during these two years. The employment sector is projected to grow by 9.25% at constant prices in 2023-24. 8.76% growth in transport, warehousing and communication sectors, 7.46% in other transport sector, 9.29% in finance related work, 10.08% in construction sector and 9.96% in other types of work. The employment sector has contributed significantly to the economic development of Tamil Nadu.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel