இடதுசாரி தீவிரவாதம் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா முதலமைச்சர்கள், பீகார் துணை முதலமைச்சர், ஆந்திரப் பிரதேச உள்துறை அமைச்சர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த மாநிலங்களுடன் ஒத்துழைக்கும் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தின் போது பங்கேற்றனர்.
மத்திய உள்துறை செயலாளர், புலனாய்வு பணியக இயக்குநர், துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய ஆயுத காவல் படைகள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
0 Comments