Recent Post

6/recent/ticker-posts

முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் / Muthuramalinga Thevar Arena - inaugurated by Chief Minister Stalin

முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் / Muthuramalinga Thevar Arena - inaugurated by Chief Minister Stalin

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள “தெய்வீகத் திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவர் அரங்கம்” திறந்து வைத்தல் தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு வைத்த கோரிக்கையினை ஏற்று, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதிலாக பொதுமக்கள் நலன்கருதி 1 கோடியே 55 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் 28.10.2023 அன்று அறிவிப்பு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் அவர்களின் நினைவிடத்தில் 1 கோடியே 55 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தெய்வீகத் திருமகனார் உ.முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தினை முதல்வர் திறந்து வைத்தார். இந்த அரங்கத்தின் மொத்த பரப்பளவு 9848.98 சதுர அடி ஆகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel