TAMIL
NOBEL PRIZE IN CHEMISTRY 2024 / 2024 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு: 2024 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அறிவித்துள்ளது. அதன்படி டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகிய மூன்று பேருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதில் டேவிட் பேக்கருக்கு கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
அதேபோல் புரத அமைப்புகளை அதன் அமினோ அமில வரிசையிலிருந்து கணித்ததற்காக டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகிய இருவருக்கும் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் மருத்துவத்துக்கான் நோபல் பரிசானது விக்டர் அம்புரோஸ் மற்றும் கோரி ருவ்குன் ஆகியோருக்கும், நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஜெ.ஹாப்ஃபீல்ட், ஜாஃப்ரி இ.ஹிண்டன் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments