NOBEL PRIZE IN PEACE 2024
2024ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு
2024ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு
TAMIL
NOBEL PRIZE IN PEACE 2024 / 2024ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு: பல்வேறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டாலும் கூட எப்போதும் அமைதிக்கான நோபல் பரிசு மீது தான் பலருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். இதற்கிடையே இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்படும். இந்தாண்டு ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியில் உள்ளிட்ட துறைகளின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இப்போது 2024ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளின் நோபல் பரிசு குறித்த அறிவிப்பு ஸ்டாக்ஹோமில் இருந்து அறிவிக்கப்படும்.
ஆனால், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் எப்போதும் நார்வேயின் ஓஸ்லோவில் இருந்து அறிவிக்கப்படும். இதற்கிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அமைதிக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளுக்காக இந்த அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்த நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காகவே அமைதிக்கான நோபல் பரிசு இந்த அமைப்புக்கு வழங்கப்படுகிறது.
ENGLISH
NOBEL PRIZE IN PEACE 2024: Even though the Nobel Prize is awarded in various fields, many people always expect the Nobel Peace Prize. Meanwhile, it has been announced that this year's Nobel Peace Prize will be awarded to the Nihon Hidankyo organization from Japan.
Every year the Nobel Prize is awarded to those who excel in various fields. This year, the Nobel Prize has already been announced in the fields of medicine, physics and chemistry.
Meanwhile, the Nobel Peace Prize for 2024 has now been announced. The announcement of the Nobel Prize in other fields will be announced from Stockholm.
But only the Nobel Peace Prize is always announced from Oslo, Norway. Meanwhile, amid great anticipation, the announcement of the Nobel Peace Prize is now out.
Nihon Hidankyo, a Japanese organization, has been awarded the Nobel Prize. The organization has been awarded the Nobel Prize for its efforts to create a nuclear-weapon-free world.
The Nihon Hidankyo continues to urge the nations of the world not to use nuclear weapons. This organization is awarded the Nobel Peace Prize for this.
0 Comments