ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றிய பிறகு முதல் முதலாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
தேசிய மாநாட்டு கட்சி, 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றது. பாஜக 29 இடங்களிலும், மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 இடத்திலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜேபிசி கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதையடுத்து தான் ஜம்மு காஷ்மீர் முதல்வராக தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவரான ஓமர் அப்துல்லா பதவியேற்றார். துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதேபோல் துணை முதல்வராக இந்து மதத்தை சேர்ந்த சுரிந்தர் சவுத்ரி பொறுப்பேற்றார். இவர் தான் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமான பிறகு முதல் இந்து மத துணை முதல்வர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
0 Comments