புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'கர்மயோகி சப்தா' (கர்மயோகி வாரம்) – தேசிய கற்றல் வாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.10.2024) தொடங்கி வைத்தார்.
மிஷன் கர்மயோகி எனப்படும் கர்மயோகி இயக்கம் 2020-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இது உலகளாவிய கண்ணோட்டத்துடன் இந்திய நெறிமுறைகளில் வேரூன்றிய, எதிர்காலத்திற்கு தயாராக உள்ள குடிமைப் பணி சேவையை வழங்க முயற்சிக்கிறது.
தேசிய கற்றல் வாரம் (என்எல்டபிள்யூ) அரசு ஊழியர்களுக்கான தனிப்பட்ட செயல்பாட்டுக்கும் நிறுவன திறன் மேம்பாட்டிற்கும் புதிய உத்வேகத்தை வழங்கும்.
"ஒரே அரசு" என்ற செய்தியை உருவாக்கி, அனைவரையும் தேசிய இலக்குகளுடன் ஒருங்கிணைத்து, வாழ்நாள் கற்றலை இது ஊக்குவிக்கும்.
0 Comments