Recent Post

6/recent/ticker-posts

REPORTS ON ROAD ACCIDENT 2023 / சாலை விபத்து குறித்த அறிக்கை 2023

REPORTS ON ROAD ACCIDENT 2023
சாலை விபத்து குறித்த அறிக்கை 2023

REPORTS ON ROAD ACCIDENT 2023 / சாலை விபத்து குறித்த அறிக்கை 2023

TAMIL

REPORTS ON ROAD ACCIDENT 2023 / சாலை விபத்து குறித்த அறிக்கை 2023: நாடு முழுவதும் கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும், சாலை விபத்துகளில் கிட்டத்திட்ட 1.73 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். சராசரியாக ஒரு நாளொன்றுக்கு 474 பேரும், ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒருவரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மாநிலங்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை கொண்டு சாலை விபத்துகள் குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்த தொடங்கியதில் இருந்து, கடந்தாண்டே அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

மேலும், கடந்தாண்டு சாலை விபத்துகளில் 4.63 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். இது 2022-ஐ ஒப்பிடுகையில் 4 சதவிகிதம் அதிகமாகும்.

கடந்த 2022-ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் 1.68 லட்சம் பேர் உயிரிழந்ததாக சாலைப் போக்குவரத்து அமைச்சகமும், 1.71 லட்சம் பேர் உயிரிழந்ததாக தேசிய குற்றப் பதிவு ஆணையமும் அறிக்கை வெளியிட்டிருந்தன.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்

REPORTS ON ROAD ACCIDENT 2023 / சாலை விபத்து குறித்த அறிக்கை 2023: கடந்த 5 ஆண்டுகள் தரவுகளை ஒப்பிடுகையில், கரோனா ஊரடங்குக்கு பிறகு 2021ஆம் ஆண்டு முதல் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களும் கணிசமாக அதிகரித்து வருகின்றன.

2021-ல் 4.12 லட்சம் விபத்துகள் ஏற்பட்ட நிலையில், 1.54 லட்சம் உயிரிழப்பும், 3.84 லட்சம் பேருக்கு காயமும் ஏற்பட்டுள்ளன. 2023-ல் 4.8 லட்சம் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. 1.73 லட்சம் உயிரிழப்பும், 4.63 லட்சம் பேர் காயமும் அடைந்துள்ளனர்.

இதில், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், தமிழகம் உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2023ஆம் ஆண்டில் சாலை விபத்து உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

அதேவேளையில், கேரளம், ஆந்திரம், பிகார், தில்லி மற்றும் சண்டீகரில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்தாண்டு குறைந்துள்ளன.

தமிழகம் இரண்டாமிடம்

REPORTS ON ROAD ACCIDENT 2023 / சாலை விபத்து குறித்த அறிக்கை 2023: உத்தரப் பிரதேசத்தில் 23,652 பேரும், தமிழகத்தில் 18,347 பேரும், மகாராஷ்டிரத்தில் 15,366 பேரும் சாலை விபத்துகளால் கடந்தாண்டு உயிரிழந்துள்ளனர்.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் பட்டியலில் தமிழகம்(72,292) முதலிடத்தில் உள்ளது. மத்தியப் பிரதேசம்(55,769) மற்றும் கேரளம்(54,320) அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

2023-ஆம் ஆண்டில் விபத்தில் உயிரிழந்தவர்களில் கிட்டத்திட்ட 76,000 பேர் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆவர். அவர்களின் 70 சதவிகிதம் பேர் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய நேரம் இது என்று போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நகர்ப்புற வழியாகச் செல்லும் நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு தனிப்பாதை அமைப்பதை கட்டாய விதிமுறையாக கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டதால் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் குறைத்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர்.

ENGLISH

REPORTS ON ROAD ACCIDENT 2023: In the last year 2023 alone, nearly 1.73 lakh people have died in road accidents across the country. An average of 474 people die every day and one every three minutes in a road accident.

Last year saw the highest number of fatalities since the central government began conducting a survey on road accidents using data from states. Also, 4.63 lakh people were injured in road accidents last year.

This is an increase of 4 percent compared to 2022. The Ministry of Road Transport had reported that 1.68 lakh people died in road accidents in 2022 and 1.71 lakh people died in National Crime Records Commission. The report for 2023 is yet to be released by both the departments.

Increasing casualties

REPORTS ON ROAD ACCIDENT 2023: Comparing the last 5 years of data, road accidents and the resulting deaths and injuries have been increasing significantly since 2021 after the Corona lockdown.

In 2021, there were 4.12 lakh accidents, 1.54 lakh deaths and 3.84 lakh injuries. 4.8 lakh accidents in 2023. 1.73 lakh people lost their lives and 4.63 lakh people were injured.

In this, 21 states and union territories including Uttar Pradesh, Maharashtra, Madhya Pradesh, Gujarat, Rajasthan and Tamil Nadu have increased road accident fatalities in 2023.

At the same time, the number of deaths due to road accidents has decreased in Kerala, Andhra Pradesh, Bihar, Delhi and Chandigarh last year.

Tamil Nadu is second

REPORTS ON ROAD ACCIDENT 2023: 23,652 people died in Uttar Pradesh, 18,347 in Tamil Nadu and 15,366 in Maharashtra last year due to road accidents.

Also, Tamil Nadu (72,292) tops the list of injured in accidents. Madhya Pradesh (55,769) and Kerala (54,320) are next.

Almost 76,000 people who died in accidents in 2023 were two-wheeler riders. It is reported that 70 percent of them died because they went without helmets.

In this situation, transport experts have said that it is time for the central and state governments to take serious measures to prevent road accidents.

Also, they have said that separate lanes for two-wheelers should be made mandatory on highways passing through urban areas. Separate lanes for two-wheelers on highways in Malaysia have reduced accidents and fatalities.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel