Recent Post

6/recent/ticker-posts

TN ALERT APP / TN ALERT செயலி

TN ALERT APP
TN ALERT செயலி

TN ALERT APP / TN ALERT செயலி

TAMIL

TN ALERT APP / TN ALERT செயலி: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பொதுமக்களுக்கான TN-Alert என்னும் கைப்பேசி செயலியை சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வெளியிட்டார். 

TN-Alert செயலி, பொதுமக்கள் எளிய முறையில் இயக்கக் கூடிய வானிலை செயலியாக உள்ளது. இச்செயலியின் மூலம் தம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை பொதுமக்கள் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம். 

இந்த செயலியில் அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியான தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா போன்ற தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி உள்ளது.

பேரிடர் மற்றும் கனமழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யவும், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்தச் செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

பேரிடர் குறித்த வானிலை முனனெச்சரிக்கையினை அறிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் பொதுமக்கள் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் TN- Alert செயலியை, Google Play Store மற்றும் IOS App Store-ல் இருந்து பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

ENGLISH

TN ALERT APP: Revenue and Disaster Management Minister KKSSR Ramachandran launched a mobile app called TN-Alert for the public at the State Emergency Operations Center in Ezhilakam, Chennai.

TN-Alert app is an easy-to-use weather app for the public. Through this app, the public can know the weather and warning messages based on their location in Tamil.

This app has the facility to know information like weather forecast for the next four days, rain gauge wise daily rainfall, current water availability of reservoirs, whether your location is under flood risk.

The app provides a way for people affected by calamities and heavy rains to register their complaints and contact the district administration.

The public has been requested to download the TN-Alert application from Google Play Store and IOS App Store to help the public take preparedness measures in accordance with the weather warning of the disaster.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel