UNICEF REPORT ON GIRL CHILD SAFETY 2024
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான யுனிசெப் ஆய்வறிக்கை 2024
TAMIL
UNICEF REPORT ON GIRL CHILD SAFETY 2024 / பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான யுனிசெப் ஆய்வறிக்கை 2024: யுனிசெப் அமைப்பானது, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகள் என 37 கோடி பேர் (அதாவது 8ல் ஒருவர்) பாலியல் பலாத்காரம் அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர்.
இணைய வழியான பாலியல் துன்புறுத்தலுக்கு 65 கோடி பெண்கள் (5ல் ஒருவர்) உள்ளாகி இருக்கின்றனர். இந்த வகையில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ள பெண்களில், 7.9 கோடி பேர் சஹாரா ஆப்ரிக்கா பகுதியையும், 7.5 கோடி பேர் கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவையும், 7.3 கோடி பேர் மத்திய மற்றும் தெற்காசியாவையும், 6.8 கோடி பேர் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவையும், 4.5 கோடி பேர் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியையும் சேர்ந்தவர்கள்.
உள்நாட்டு கலவரம் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற நிலை கொண்ட நாடுகளில் வசிக்கும் பெண்களின் நிலை இன்னும் மோசம். அங்கு நிவாரண முகாம்கள் மற்றும் ஐ.நா., பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு செய்த பகுதிகளில் வசிக்கும் பெண்களில் 4 ல் ஒருவர் பாலியல் வன்முறைக்கு அதிகம் உள்ளாகி இருக்கின்றனர்.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுமிகளில் பெரும்பாலானோர் வயது 14 முதல் 17 வரை தான் இருக்கிறது. இந்த சித்ரவதையால் பாதிக்கப்படும் சிறுமிகள் மீண்டும் அதே போன்றதொரு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இதனால் சிறுமிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் நீண்ட நாட்களுக்கு இருக்கிறது.
மன அழுத்தம், மன சோர்வு ஆகியவற்றால் அவதிப்படுகின்றனர். பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள், போதைப்பொருள் துஷ்பிரயோகம் ஆகியவற்றாலும் அவதிப்படுகின்றனர்.
தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை வெளியில் கூறாத சிறுமிகள் மற்றும் பெண்கள் நிலைமை இதைவிட மோசமாக இருக்கிறது. பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் என உலகளவில் 24 முதல் 31 கோடி பேர் குழந்தை பருவத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர்.
இணையவழியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் 53 கோடியாக உள்ளது.
ENGLISH
UNICEF REPORT ON GIRL CHILD SAFETY 2024: UNICEF has released a report on the protection of girls. Around 37 million women and girls (that's 1 in 8) have been raped or sexually harassed worldwide.
65 crore women (1 in 5) have been victims of online sexual harassment. 7.9 million women are from sub-Saharan Africa, 7.5 million from East and Southeast Asia, 7.3 million from Central and South Asia, 6.8 million from Europe and North America, and 4.5 million from Latin America and the Caribbean.
The situation for women living in countries with civil strife and political instability is even worse. 1 in 4 women living in relief camps and areas organized by UN Security Operations are more likely to experience sexual violence.
Most of the girls who are sexually harassed are between the ages of 14 and 17. The girls who are victims of this torture are again subjected to a similar sexual assault. The effects of this on girls are long-lasting.
Suffering from stress and mental fatigue. They also suffer from sexually transmitted infections and drug abuse. The situation is even worse for girls and women who do not speak out about their injuries. 24 to 31 crore people worldwide, not only women but also men and boys, have been subjected to sexual abuse during childhood. The number of victims of online sexual harassment is 53 crores.
0 Comments