குரூப்- சி பிரிவில் இடம்பெற்றுள்ள கேரளம், ஹரியாணா அணிகள் ரோதக்கில் உள்ள சௌதரி பன்ஷிலால் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கேரள அணி 116.1 ஓவர்களில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
30.1 ஓவர்கள் பந்துவீசிய அன்ஷுல் காம்போஜ் 49 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.
ரஞ்சி கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் ஒருவர் 10 விக்கெட்டுகள் வீழ்த்துவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக, 1956 ஆம் ஆண்டில் அஸ்ஸாமுக்கு எதிராக பெங்கால் அணியின் பிரேமாங்ஷூ சட்டர்ஜி (10 விக்கெட்டுகள்/20 ரன்கள்), 1985 ஆம் ஆண்டில் விதர்பா அணிக்கு எதிராக ராஜஸ்தானின் பிரதீப் சுந்தரம் (10 விக்கெட்டுகள்/78 ரன்கள்) எடுத்துள்ளனர்.
முதல்தரப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தும் 6-வது வீரர் ஆவார். அவர்களைத் தவிர்த்து அனில் கும்ப்ளே, சுபாஷ் குப்தே மற்றும் தேபாஷிஷ் மொகந்தி ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.
0 Comments