Recent Post

6/recent/ticker-posts

ஜார்க்கண்டின் 14-வது முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார் / Hemant Soren sworn in as 14th Chief Minister of Jharkhand

ஜார்க்கண்டின் 14-வது முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார் / Hemant Soren sworn in as 14th Chief Minister of Jharkhand

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 56 இடங்களுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்திய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

முன்னதாக, ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் புதிய எம்எல்ஏ-க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஹேமந்த் சோரன் தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து ஆளுநா் மாளிகைக்குச் சென்று ஆளுநா் சந்தோஷ் கங்வாரிடம் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரன் உரிமை கோரியிருந்தார்.

இதையடுத்து, கடந்த 2000-ஆம் ஆண்டு நவ.15-இல் பிகாரை பிரித்து ஜாா்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. அந்த மாநிலத்தின் முதல்வராக 4-ஆவது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார்

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, ஷிபு சோரன், தமிழக துணை முதல்வர் உதயநிதி, மேற்குவங்க முதல்வர் மம்தா, ஆம் ஆத்மி கட்சியில் ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel