Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவில் நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் / India's GST collection in October this year is Rs.1.87 lakh crore

இந்தியாவில் நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் / India's GST collection in October this year is Rs.1.87 lakh crore

நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 1.87 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 346 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. 8வது முறையாக மாதந்திர ஜிஎஸ்டி வரி வசூல்ரூ.1.70 லட்சத்திற்கு அதிகமாக உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.1 சதவீதம் அதிகமாக உள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு அக்டோபரில் 1.72 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலான நிலையில் நடப்பு ஆண்டு அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.9 சதவீதம் அதிகரித்து 1.87 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு பொருளாதார நடவடிக்கை மற்றும் வரி வசூல் முறை சிறப்பாக செயல்படுவதை வெளிப்படுத்துவதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel