Recent Post

6/recent/ticker-posts

நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.4 சதவீதமாக உயரும் / The country's GDP growth rate will increase to 5.4 percent in the second quarter of the current financial year

நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.4 சதவீதமாக உயரும் / The country's GDP growth rate will increase to 5.4 percent in the second quarter of the current financial year

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2024-25-ம் நிதியாண்டுக்கான ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2-வது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் செலவினங்கள் மதிப்பிடப்பட்டுள்ள நிலையான விலைவாசி (2011-12) மற்றும் தற்போதைய விலைவாசி என இரண்டு விதமாக மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான மொத்த மதிப்பு குறியீடு அடிப்படை விலைவாசி தொடர்பான மதிப்பீடுகளின்படி பொருளாதார நடவடிக்கைகளில் ஆண்டுதோறும் மாறி வருகிறது.

2024-25-ம் நிதியாண்டுக்கான 2-வது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.4 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது கடந்த நிதியாண்டின் 2-வது காலாண்டில் 8.1 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் குறைவாக உள்ளது. உற்பத்தித் துறையில் 2.2 சதவீதமும், சுரங்கம் மற்றும் குவாரி துறையில் -0.1 சதவீதம் என்ற நிலையில் இருந்தபோதிலும் அரையாண்டிற்கான மொத்த வருவாய் இனம் 6.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel