இதில் பேரிடர் அபாய குறைப்பு (டிஆர்ஆர்) குறித்த அமைச்சர்கள் நிலையிலான முதலாவது பிரகடனத்தை இறுதி செய்வதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது.
டாக்டர் பி.கே.மிஸ்ரா, பேரிடர் அபாயங்களைக் குறைப்பதில் இந்திய அரசு அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பகிர்ந்து கொண்டார்.
பிரேசில், தென்னாப்பிரிக்க அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இந்தியக் குழுவினர், மாநாட்டை நடத்தும் நாடான பிரேசில் மற்றும் ஜப்பான், நார்வே, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் அமைச்சர்கள், பிரதிநிதிகளுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
பேரிடர் அபாயக் குறைப்புப் பணிக்குழு, இந்தியாவின் ஜி20 தலைமையின் போது இந்தியாவின் முன்முயற்சியில் நிறுவப்பட்டது. இந்தியாவின் செயல்பாடுகள், உலகளாவிய பேரிடர் மறுசீரமைப்பு முயற்சிகளில் அதன் வளர்ந்து வரும் பங்கையும், பாதுகாப்பான, அதிக நெகிழ்திறன் கொண்ட உலகத்தை உருவாக்குவதற்கான அதன் உறுதிப்பாட்டையும் எடுத்துக் காட்டுகிறது.
0 Comments