ஆசிய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மதிப்புகள் வரலாற்றின் தாக்குதலைத் தாங்கியுள்ளன, இருப்பினும் உறுதியாக நிற்கின்றன, புத்தரின் உள்ளார்ந்த மதிப்புகளுக்கான சான்றுகள், முதல் ஆசிய பௌத்த உச்சிமாநாட்டின் 2-வது நாளில் பொதுவான பேசு பொருளாக இருந்தது.
புத்தரின் போதனைகள் தத்துவ ரீதியாக மட்டுமல்லாமல், நடைமுறையிலும் பிணைக்கும் சக்தியாக இருப்பதை பேச்சாளர்கள் ஆமோதித்தனர். நெருக்கடி காலங்களில் ஆசிய நாடுகளையும் கலாச்சாரங்களையும் நிலைநிறுத்த அவை உதவியுள்ளன.
கலாசார அமைச்சகம், சர்வதேச பௌத்த கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த முதலாவது ஆசிய பௌத்த உச்சி மாநாட்டில் 'ஆசியாவை பலப்படுத்துவதில் புத்த தம்மத்தின் பங்கு' எனும் கருப்பொருளில் 32 நாடுகள் பங்கேற்றதுடன் 160-க்கும் மேற்பட்ட சர்வதேசப் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மகாசங்கத்தின் உறுப்பினர்கள், பல்வேறு துறவற மரபுகளின் பிதாமகர்கள், பிக்குகள், கன்னியாஸ்திரிகள், ராஜதந்திர சமூகத்தின் உறுப்பினர்கள், பௌத்த ஆய்வுகளின் பேராசிரியர்கள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் உள்பட சுமார் 700 பங்கேற்பாளர்கள் இதில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
0 Comments