சிமெண்ட், சுத்திகரிப்பு பொருட்கள், நிலக்கரி, உரங்கள் மற்றும் எஃகு ஆகியவற்றின் உற்பத்தி 2024 செப்டம்பரில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த, தனிப்பட்ட உற்பத்தி செயல்திறனை தொழில்துறை குறியீட்டு எண் அளவிடுகிறது.
2024 ஜூலை மாதத்திற்கான முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீட்டு எண்ணின் இறுதி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக உள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 4.1 சதவீதம் (தற்காலிகமானது) ஆகும்.
- நிலக்கரி - நிலக்கரி உற்பத்தி (எடை: 10.33 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
- கச்சா எண்ணெய் - கச்சா எண்ணெய் உற்பத்தி (எடை: 8.98 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 4.8 சதவீதம் குறைந்துள்ளது.
- இயற்கை எரிவாயு - இயற்கை எரிவாயு உற்பத்தி (எடை: 6.88 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 1.2 சதவீதம் குறைந்துள்ளது.
- பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் - பெட்ரோலிய சுத்திகரிப்பு உற்பத்தி (எடை: 28.04 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
- உரங்கள் - உர உற்பத்தி (எடை: 2.63 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
- எஃகு - எஃகு உற்பத்தி (எடை: 17.92 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 4.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
- சிமெண்ட் - சிமெண்ட் உற்பத்தி (எடை: 5.37 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 3.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
- மின்சாரம் - மின்சார உற்பத்தி (எடை: 19.85 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 0.6 சதவீதம் குறைந்துள்ளது.
0 Comments