கூட்டு இராணுவப் பயிற்சியின் 3-வது பதிப்பு ஆஸ்த்ராஹிந்த் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் இன்று தொடங்கியது.
இந்த பயிற்சி 2024 நவம்பர் 8 முதல் 21 வரை நடத்தப்படும். ஆஸ்த்ராஹிந்த் பயிற்சி என்பது இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இதே பயிற்சியின் கடைசி பதிப்பு ஆஸ்திரேலியாவில் 2023 டிசம்பரில் நடத்தப்பட்டது.
140 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில், முக்கியமாக டோக்ரா ரெஜிமெண்டின் ஒரு பட்டாலியன் மற்றும் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 14 வீரர்கள் இடம்பெறுவார்கள்.
120 வீரர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய இராணுவப் படைப்பிரிவு, 2வது படைப்பிரிவின் 10-வது அணியின் 13-வது இலகு குதிரை படைப்பிரிவால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.
0 Comments