மத்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் முதல்முறையாக அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 5.18 சதவீதமாக இருக்கும் என்ற அரசுத் தரப்பு கணிப்பை விட தற்போது அதிகரித்துள்ளது.
நாட்டின் பணவீக்க விகிதத்தை 2 - 6 சதவீதத்தில் வைத்திருக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. நடுத்தரமாக 4 சதவீதமாக வைத்திருக்க இலக்கு வைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 5.49 சதவீதமாக இருந்தது. இதில் கடந்த 9 மாதங்களை விட அதிகமாகும். ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவில், உணவுப்பொருள்களின் விலையேற்றமானது, நடுத்தரக் குடும்பங்களின் வாங்கும் திறனைக் குறைத்துள்ளது.
2024 - 25 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதமாக இருக்கும் என மத்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. எனினும் நகர்புற நுகர்வு பெருமளவு குறைந்து வருவதை தனியார் கணிப்பாளர்கள் கணிக்கத் தொடங்கியுள்ளனர்.
உணவுப் பொருள்கள் மீதான வருடாந்திர பணவீக்கம் 9.24 சதவீதத்திலிருந்து 10.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் காய்கறிகளின் விலை 42.18% அதிகரித்துள்ளது. இதுவே செப்டம்பர் மாதம் 36% ஆக இருந்தது.
தானியங்கள் மீதான பணவீக்க விகிதம் 6.94% ஆக அதிகரித்துள்ளது. இதுவே செப்டம்பரில் 6.84% ஆக இருந்தது. இதேபோன்று பருப்பு வகைகளுக்கான பணவீக்க விகிதம் 7.43 சதவீதத்திலிருந்து 9.89 சதவீதமாக அதிகரித்துள்ளது.
0 Comments