புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மோடி, பூடான் பிரதமர் திரு தாஷோ ஷெரிங் டோப்கே, ஃபிஜி துணைப் பிரதமர் திரு மனோவா காமிகாமிகா, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்தியாவுக்கான ஐ.நா.வின் உள்ளுறை ஒருங்கிணைப்பாளர் திரு ஷோம்பி ஷார்ப், சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் (ஐசிஏ) தலைவர் திரு ஏரியல் குவார்கோ பல்வேறு நாடுகளின் பிரமுகர்கள், ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024- ல் கலந்து கொண்டவர்களை வரவேற்றார்.
மாநாட்டின் கருப்பொருள், "கூட்டுறவு அனைவருக்கும் செழிப்பை உருவாக்குகிறது" என்பதாகும். இந்திய அரசின் தொலைநோக்குக் கொள்கையான கூட்டுறவின் மூலம் வளம் (சஹ்கார் சே சம்ரித்தி) என்பதற்கு ஏற்ப இது அமைந்துள்ளது.
0 Comments