மத்திய அரசின் மொத்த வருவாய் அக்டோபர் 2024வரை 17,23,074 கோடி ரூபாய் ஆகும். இது 2024-25-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் 53.7 சதவீதம் ஆகும்.
மொத்த வருமானத்தில் அக்டோபர் மாதம் வரையில் வரி வருவாய் 13,04,973 கோடி ரூபாயாகவும் வரி அல்லாத வருவாய் 3,99,294 கோடி ரூபாயாகவும், கடன் அல்லாத மூலதன வருவாய் 18,817 கோடியாகவும் உள்ளது.
இதில் 7,22,976 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் வரிபகிர்வு கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 1,94,571 கோடி ரூபாய் கூடுதலாகும்.
மத்திய அரசின் மொத்த செலவின தொகை (2024-25-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் 51.3 சதவீதம்) 24,73,308 கோடி ரூபாயாகும். இதில் 20,07,353 கோடி ரூபாய் வருவாயின செலவினமாகவும், 4,66,545 கோடி ரூபாய் மூலதன செலவினமாகவும் உள்ளது.
மொத்த வருவாயின செலவினங்களில் 5,96,347 கோடி ரூபாய் வட்டிக்கும் 2,48,670 கோடி ரூபாய் முக்கிய மானியங்களுக்கும் செலவிடப்பட்டுள்ளது.
0 Comments