இலங்கையில் முந்தைய ரணில் விக்ரமசிங்கே அரசு தீவிர பொருளாதார திவால்நிலையை எதிர்கொண்டதால் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியின் கடன் உதவியை நாடியது.
இந்நிலையில் அங்கு நடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றது. அதிபராக அனுரகுமார திசநாயக தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி திட்டமானது தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று புதிய அதிபர் அறிவித்திருந்தார்.
இதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் குழு சமீபத்தில் மதிப்பாய்வை முடித்து சென்றது. இதனை தொடர்ந்து இலங்கைக்கு 4வது தவணையாக 3பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.25330கோடி) தொகையை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்து.
0 Comments