டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 6-4, 6-2 என்ற செட்களில் நெதர்லாந்தின் வான் டெ ஜாண்ட்ஷுல்பினை வீழ்த்தினார். இவர் காலிறுதியில் ரஃபேல் நடாலை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பா் 1 வீரரான யானிக் சின்னா் நெதர்லாந்தின் டாலோன் கிரீஸ்பூக்கரை 7-6(2), 6-2 என்ற செட்களில் தோற்கடித்தார்.
கடந்த 104 ஆண்டுகளாக முயன்று வரும் நெதா்லாந்து இந்தக் கட்டத்துக்கு வந்தது இதுவே முதல் முறையாகும். கடந்த 11 ஆண்டுகளில் இத்தாலி அடுத்தடுத்து டேவிஸ் கோப்பை வென்ற முதல் அணியாக உருவெடுத்துள்ளது.
இதுவரை மொத்தம் 3 முறை (1976, 2023, 2024) இத்தாலி அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments