உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய் சந்திரசூட்டின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை டி ஒய் சந்திரசூட் பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, சஞ்சீவ் கண்ணாவிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
காலை 10 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. உச்ச நீதிமன்றத்தின் 51வது நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்றுள்ளார். இவரது பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி வரை இருக்கிறது.
0 Comments