சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள குரு காசிதாஸ் – தாமோர் பிங்லா புலிகள் காப்பகம், நாட்டின் 56-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநிலத்தின் 6 மாவட்டங்களில் 2,829 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள குருகாசிதாஸ் - தாமோர் பிங்லா புலிகள் காப்பகம் நாட்டிலேயே மூன்றாவது பெரிய புலிகள் காப்பகம் ஆகும்.
இந்தக் காப்பகம் மலைப்பகுதிகள், அடர்ந்த காடுகள், நீரோடைகள் மற்றும் ஆறுகளைக் கொண்டிருப்பதன் மூலம் பல்லுயிர் புகலிடமாகவும், புலிகளுக்கான முக்கியமான வாழ்விடமாகவும் திகழ்கிறது.
மேலும் இந்தக் காப்பகத்தில், 388 முதுகெலும்புள்ள உயிரினங்களும், 365 முதுகெலும்பில்லாத உயிரினங்கள் என மொத்தம் 753 வகையான உயிரினங்கள் உள்ளன. முதுகெலும்புள்ள உயிரினங்களில் 230 வகையான பறவை இனங்களும், 55 வகையான பாலூட்டிகளும் அடங்கும்.
0 Comments