பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஜமுய் நகரில் நடைபெற்ற பழங்குடியினர் கவுரவ தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பிர்சா முண்டாவின் நினைவாக நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார்.
மேலும், பிரதமர் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM-JANMAN) எனும் திட்டத்தின் கீழ் பழங்குடியின குடும்பங்களுக்காக கட்டப்பட்ட 11,000 வீடுகளின் கிரஹ பிரவேச நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.
PM-JANMAN திட்டத்தின் கீழ் 23 நடமாடும் மருத்துவப் பிரிவுகளையும் (MMUs), தொலைதூர பழங்குடிப் பகுதிகளில் சுகாதார அணுகலை மேம்படுத்துவதற்காக Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan (DAJGUA) திட்டத்தின் கீழ் 30 கூடுதல் நடமாடும் மருத்துவப் பிரிவுகளையும் பிரதமர் தொடங்கிவைத்தார். 10 ஏகலவ்ய மாதிரி குடியிருப்புப் பள்ளிகளையும், 300 வளர்ச்சிக் கேந்திராக்களையும் அவர் திறந்து வைத்தார்.
பழங்குடியினர் பகுதிகளில் 500 கிமீ புதிய சாலைகள் மற்றும் 100 பல்நோக்கு மையங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர்-ஜன்மனின் கீழ் 25,000 புதிய வீடுகளுக்கும், DAJGUA-ன் கீழ் 1.16 லட்சம் வீடுகளுக்கும், பழங்குடியின மாணவர்களுக்கான 370 விடுதிகளுக்கும் மோடி அடிக்கல் நாட்டினார்.
0 Comments