Recent Post

6/recent/ticker-posts

சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூ.725.62 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு ஒப்புதல் / The High Level Committee chaired by Union Home Minister Mr. Amit Shah approved three projects worth Rs.725.62 crore under the Expansion and Modernization of Fire Services in Chhattisgarh, Odisha and West Bengal

சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கான "மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல்" என்பதன் கீழ், ரூ.725.62 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சத்தீஸ்கருக்கு ரூ.147.76 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.201.10 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.376.76 கோடியும் வழங்க குழு ஒப்புதல் அளித்துள்ளது. உயர்மட்டக் குழுவில் நிதியமைச்சர், வேளாண் அமைச்சர், நித்தி ஆயோக் துணைத்தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஆண்டில் மாநிலங்களுக்கு ரூ.21,026 கோடிக்கு மேல் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில் 26 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.14,878.40 கோடியும், 15 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4,637.66 கோடியும், 11 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து ரூ.1,385.45 கோடியும், 03 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து ரூ.124.93 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel