Recent Post

6/recent/ticker-posts

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் அமல் / Ceasefire between Israel and Hezbollah comes into effect

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் அமல் / Ceasefire between Israel and Hezbollah comes into effect

பாலஸ்தீனத்திற்கு ஆதாரவாக, லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அதன் பிறகு, இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த தாக்குதல்கள் மிகவும் பயங்கரமாக இருந்தது.

ஏவுகணை தாக்குதலை எல்லாம் தாண்டி பேஜர், சோலார் தகடு, வாக்கி டாக்கி வெடிப்பு என்று தாக்குதல்கள் நீண்டன. மேலும், ஹிஸ்புல்லா அமைப்பைச் சார்ந்த தலைவர், முக்கிய அதிகாரிகள், உறுப்பினர் என பலரை இஸ்ரேல் அழித்தது.

இந்நிலையில், லெபனானைச் சோ்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதை அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதாகவும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel