Recent Post

6/recent/ticker-posts

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார் / Chief Minister M. K. Stalin launched the program to ensure nutrition

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார் / Chief Minister M. K. Stalin launched the program to ensure nutrition

தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளைகளை போக்கும் பொருட்டு 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டம் முதற்கட்டமாக 2022-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. 

இதில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3% குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக இத்திட்டத்தின் 2 ஆம் கட்டத்தினை ரூ. 22 கோடி மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் வாரணவாசி குழந்தைகள் மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

பிறந்தது முதல் 6 மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்கள் 15 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இத்திட்டத்தில் தற்போது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 0-6 மாதமுள்ள 76,705 குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel