முதல் முறையாகத் தமிழ்நாடு அரசு முதல்வர் படைப்பகம் என்ற பெயரில் கோ வொர்க்கிங் ஸ்பேஸ் சேவையை அளிக்கிறது. புதிய இளைஞர் பயிற்சி மையமான முதல்வர் படைப்பகம், வடக்கு சென்னை பகுதியில் உள்ள அகரத்தில் ஜெகனாதன் தெருவில் அமைந்துள்ளது.
சென்னை கொளத்தூர் ஜெகந்நாதன் சாலையில், மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் முதலமைச்சரின் சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் "முதல்வர் படைப்பகம்" புதிதாக கட்டப்பட்டுள்ளது.
ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த படைப்பகத்தில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படைப்பகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதற்கிடையே, படைப்பகத்திற்கு வரும் நபர்களுக்கு படிப்பதற்கென்று ஒரு தளமும், பணியாற்றுவதற்கு என்று ஒரு தளமும், உணவு அருந்துவதற்கு ஒரு தளமும் என 3 தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கும் அளவிற்கு இடவசதி உடன் கூடிய, பல்வேறு புத்தகங்களை கொண்ட நூலகம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கு ரூ.5 மற்றும் ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்தெரிவிக்கின்றது. மேலும் பணி செய்வதற்காக கோ- ஒர்க்கிங் ஸ்டேஷன் என்று அமைக்கப்பட்டுள்ள ஒரு தளத்தில், 38 நபர்கள் ஒரே நேரத்தில் பணியாற்றலாம் என்றும், இதில் 3 கலந்தாய்வு கூடங்கள் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருக்கும் நிறுவனங்களுக்கு கோ ஒர்க்கிங் ஸ்பேஸ் பணியிடத்தை பகிரவும் உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு குறைந்த அளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments