ஒரு காலத்தில் உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடு என்ற இடத்தில் இருந்த சீனா, பல்லாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது.
கடந்த 2021ல் சீன மக்கள் தொகை 141 கோடியாக இருந்தது. அதன்பிறகு மக்கள் தொகையில் சரிவு ஏற்படத் தொடங்கியது. 2025ல் சீன மக்கள் தொகை, 136 கோடி என்ற நிலையை எட்டி விடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் நாட்டின் மக்கள் தொகை கடுமையான சரிவை எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அரசின் குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கைகள், வாழ்க்கைச் செலவுகள், சீர்குலைந்த குடும்ப நடைமுறைகள் காரணமாக, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
இதன் விளைவாக, 2100ம் ஆண்டில் (இன்னும் 76 ஆண்டுகளில்) சீனாவின் மக்கள் தொகை, தற்போதைய நிலையில் இருப்பதில் பாதியாக குறைந்து விடும் என்று ஐ.நா., மதிப்பீடு செய்துள்ளது.
மக்கள் தொகை குறைவு காரணமாக, தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும்; முதியோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இதன் மூலம் பொருளாதாரம், பென்சன் திட்டம், சுகாதார திட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
0 Comments