பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) நவம்பர் 12, 2024 அன்று ஒடிசா கடற்கரையின் சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து நீண்ட தூர நில தாக்குதல் ஏவுகணையின் (LRLACM) முதல் சோதனையை மொபைல் லாஞ்சர் மூலம் வெற்றிகரமாக நடத்தியது.
சோதனையின் போது, அனைத்து துணை அமைப்புகளும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட்டதுடன், முதன்மை பணி நோக்கங்களை பூர்த்தி செய்தன. ஏவுகணையின் செயல்திறன் ரேடார், எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம் மற்றும் ஐ.டி.ஆரால் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்ட டெலிமெட்ரி போன்ற பல வரம்பு சென்சார்களால் கண்காணிக்கப்பட்டது.
இந்த ஏவுகணை பெங்களூருவில் உள்ள ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் நிறுவனத்தால் பிற டி.ஆர்.டி.ஓ ஆய்வகங்கள் மற்றும் இந்திய தொழில்துறைகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
0 Comments