ராஜஸ்தான் மாநிலத்தில் பணி நியமனத்தில் விதிமுறைகளை சிலருக்கு ஏற்ற வகையில் தளர்த்தியதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மூன்று நீதிபதிகள் அமர்வில் கடந்த 2013ம் ஆண்டு விசாரிக்கப்பட்டு பின்னர், அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
ஒரு பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் பெற்ற பிறகு அல்லது பாதி வழியில் விதிமுறைகளை மாற்றக்கூடாது என்று தீர்ப்பில் கூறியுள்ளது. பணியிடங்கள் நிரப்பப்படுவது பாகுபாடின்றி வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
0 Comments