கர்நாடக மாநிலத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் பதினைந்தாவது நிதிக்குழு மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது.
முதல் தவணையாக ரூ.448.29 கோடி மதிப்பிலான நிபந்தனையற்ற மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் தகுதியான 5949 கிராம பஞ்சாயத்துகளுக்கும் பொருந்தும்.
மத்திய அரசு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் (குடிநீர் மற்றும் துப்புரவு துறை) மூலம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக மாநிலங்களுக்கு 15-வது நிதிக்குழு மானியத்தை விடுவிக்க பரிந்துரை செய்கிறது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியங்கள் பரிந்துரைக்கப்பட்டு ஒரு நிதியாண்டில் 2 தவணைகளில் விடுவிக்கப்படுகின்றன.
0 Comments