ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்களுடன் நாட்டின் முதல் அனைத்து பெண்கள் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பிரிவை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
முக்கியப் பிரமுகா்கள் (விஐபி) பாதுகாப்புடன் நாடாளுமன்றம், தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள், நாட்டின் 68 விமான நிலையங்கள் மற்றும் முக்கிய வரலாற்று நினைவுச் சின்னங்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மத்திய பாதுகாப்புப் படையான சிஐஎஸ்எஃப்-இல் சுமாா் 1.80 லட்சம் காவலா்கள் உள்ளனா்.
இதில் 1,025 பெண் காவலா்களை உள்ளடக்கிய நாட்டின் முதல் அனைத்து பெண் படைப் பிரிவை மூத்த காமண்டா் தலைமையில் அமைக்க அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.
0 Comments