Recent Post

6/recent/ticker-posts

கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் (ஜிசிஓஎன்) விருது / Grand Commander of the Order of the Niger (GCON) Award

கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் (ஜிசிஓஎன்) விருது / Grand Commander of the Order of the Niger (GCON) Award

ஆப்பிரிக்க தேசமான நைஜீரியாவின் அதிபா் போலா அகமது தைனுபு அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு இருநாள்கள் பயணமாக சென்றுள்ளாா் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த 17 ஆண்டுகளில், இந்திய பிரதமா் ஒருவா் நைஜீரியாவுக்கு சென்றது இதுவே முதல்முறையாகும்.

நைஜீரியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் (ஜிசிஓஎன்)’ விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.

இதன்மூலம், சர்வதேச அளவில், பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு பின், இந்த உயரிய விருதை பெறும் உலகத் தலைவர் என்ற பெருமை மோடியைச் சேர உள்ளது.

முன்னதாக, கடந்த 55 ஆண்டுகளுக்கு முன், 1969-இல் ராணி எலிசபெத்துக்கு ஜிசிஓஎன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பிரதமர் மோடி பெறும் 17-ஆவது சர்வதேச விருது இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நைஜீரியாவை தொடா்ந்து, பிரேஸிலில் இரு நாள்களும் (நவ. 18, 19), கயானாவில் மூன்று நாள்களும் (நவ.19-21) அவா் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel