டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, நெடுந்தொலைவு சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வடிவமைத்து சோதித்து வருகின்றது.
நீண்ட தூர ஹைப்பர்சானிக் ஏவுகணையின் விமான சோதனை, ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை டிஆர்டிஓ மற்றும் ஆயுதப்படையின் மூத்த விஞ்ஞானிகள் முன்னிலையில் விமான சோதனை வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது.
0 Comments