விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புதல் உள்ளிட்டவற்றில் உலக நாடுகள் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களோடும் இஸ்ரோ ஒப்பந்தம் செய்து இயங்குகிறது.
அந்த வகையில் இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 (Falcon 9) ராக்கெட் மூலம் இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் - என்2 விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று (நவ.19) அதிகாலை 12.01 மணியளவில் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் 4700 கிலோ எடை கொண்டது என்பது கவனிக்கத்தக்கது.
இஸ்ரோவுக்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments