Recent Post

6/recent/ticker-posts

அலிகார் பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்து செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு / Minority Status to Aligarh University - Supreme Court Verdict

அலிகார் பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்து செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு / Minority Status to Aligarh University - Supreme Court Verdict

உத்தரபிரதேசம் அலிகார் பல்கலைக்கழகம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு சர் சையது அகமது கான் என்பவரால் நிறுவப்பட்டது. முஸ்லிம் மாணவ, மாணவிகள் அதிகம் பயின்று வரும் இந்தப் பல்கலையில் 50 சதவீத ஒதுக்கீடு இருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், அலிகார் முஸ்லிம் பல்கலைகழகம் சிறுபான்மை கல்வி நிறுவனமாக இருந்தது கிடையாது என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தலைமை சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பை வெளியிட்டது.

அதில், தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் ஒரு கருத்தையும், 3 நீதிபதிகள் மாறுபட்ட கருத்தையும் தெரிவித்தனர். பாராளுமன்ற சட்டத்தால் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் என்பதற்காக, அலிகார் பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கினர்.

இதன்மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது உறுதியாகியுள்ளது. ஓய்வுபெற இருக்கும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு இது கடைசி வேலைநாளாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel