கடந்த 10 நாட்களுக்கு முன், ஒடிசா கடற்கரை பகுதியில் இருந்து, நீண்ட துார இலக்குகளை தாக்கும், 'ஹைப்பர்சானிக்' ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, அணுசக்தியில் இயங்கும் ஐ.என்.எஸ்., அரிகாட் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் திறன் உடைய, கே - 4 ஏவுகணை, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
விசாகப்பட்டினத்தில் உள்ள வங்கக் கடல் பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன் வாயிலாக, நிலம், ஆகாயம் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணையை செலுத்தும் குறிப்பிட்ட சில நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தப்படும் இந்த ஏவுகணை, 3,500 கி.மீ., தொலைவு வரை சென்று தாக்கும் திறன் உடையது. இதுபோன்ற சோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறை.
0 Comments