பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், அருணாச்சலப் பிரதேச மாநிலம் ஷி யோமி மாவட்டத்தில் ஹியோ நீர்மின் திட்டம் அமைப்பதற்கு ரூ.1939 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் நிறைவு காலம் 50 மாதங்கள் ஆகும்.
240 மெகாவாட் (3 x 80 மெகாவாட்) நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்த திட்டம் 1000 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
இத்திட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் தற்போதைய மின்சார விநியோக நிலையை மேம்படுத்தவும், தேசிய மின்கட்டமைப்பை சமநிலைப்படுத்தவும் உதவும்.
வடகிழக்கு மின்சாரக் கழகம் லிமிடெட் மற்றும் அருணாச்சலப் பிரதேச அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சி நிறுவனம் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
சாலைகள், பாலங்கள் மற்றும் அதனைச் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு நிதி உதவியாக ரூ.127.28 கோடியை மத்திய அரசு வழங்கும். மேலும், மாநிலத்தின் பங்குத் தொகையாக ரூ.130.43 கோடியையும் மத்திய அரசு வழங்கும்.
0 Comments