Recent Post

6/recent/ticker-posts

கிழக்கு லடாக் எல்லையில் 14,300 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை - இந்திய ராணுவம் திறப்பு / Indian Army inaugurates 14,300-foot-tall Chhatrapati Shivaji statue on Eastern Ladakh border

கிழக்கு லடாக் எல்லையில் 14,300 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை - இந்திய ராணுவம் திறப்பு / Indian Army inaugurates 14,300-foot-tall Chhatrapati Shivaji statue on Eastern Ladakh border

கடந்த 2020-ஆம் ஆண்டு, பாங்காங் ஏரிக்கரையில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனர்.

இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் போக்கு, பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அண்மையில் முடிவுக்கு வந்தது.

டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த அக்டோபரில் இரு நாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது இரு நாட்டு உறவில் முக்கிய முன்னேற்றமாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.

லடாக்கின் லேவைத் தளமாகக் கொண்ட '14 கார்ப்ஸ்' ராணுவப் படைப் பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹிதேஷ் பல்லா கடந்த டிச. 26-ம் தேதி இந்த சிலையை திறந்து வைத்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel