Recent Post

6/recent/ticker-posts

உத்தரப்பிரதேசம், ஆந்திராவுக்கு ஊரக வளர்ச்சிக்கான 15-வது நிதிக்குழு மானியம் ஒதுக்கீடு / 15th Finance Commission grants for rural development allocated to Uttar Pradesh, Andhra Pradesh

உத்தரப்பிரதேசம், ஆந்திராவுக்கு ஊரக வளர்ச்சிக்கான 15-வது நிதிக்குழு மானியம் ஒதுக்கீடு / 15th Finance Commission grants for rural development allocated to Uttar Pradesh, Andhra Pradesh

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024 - 2025ம் நிதியாண்டில் 15-வது நிதிக்குழு மானியத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 2-வது தவணையாக ரூ.1598.80 கோடி மதிப்பிலான நிபந்தனையற்ற மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி மாநிலத்தின் தகுதியுள்ள அனைத்து 75 மாவட்ட ஊராட்சிகள், தகுதியுள்ள 826 வட்டார பஞ்சாயத்துகள், தகுதியுள்ள அனைத்து 57691 கிராம பஞ்சாயத்துக்களுக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்டு உள்ளது.

2024-25-ம் நிதியாண்டில் 15-வது நிதிக்குழு மானியமாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2-வது தவணையாக ரூ.420.9989 கோடி நிபந்தனையற்ற மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனோடு சேர்த்து முதல் தவணையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.25.48 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 13,097 கிராம ஊராட்சிகளுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட 650 வட்டார ஊராட்சிகளுக்கும், மாநிலத்தில் உள்ள அனைத்து 13 மாவட்ட ஊராட்சிகளுக்கும் பொருந்தும்.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகம் ஆகியவற்றின் மூலம் மத்திய அரசு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15-வது நிதிக்குழு மானியத்தை மாநிலங்களுக்கு வழங்க பரிந்துரை செய்கிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியம் ஒரு நிதியாண்டில் 2 தவணைகளில் வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel