ரூ. 2,000 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமானவையாக இருந்தாலும், மே 19, 2023 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்திலிருந்து ரூ.2,000 மதிப்புள்ள நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
மே 19, 2023 அன்று வணிக முடிவில் ரூ.3.56 லட்சம் கோடியாக புழக்கத்திலிருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, நவம்பர் 29, 2024 அன்று வணிக முடிவில் ரூ.6,839 கோடியாக குறைந்தது.
இவ்வாறு, 2023 மே 19 நிலவரப்படி புழக்கத்திலிருந்த ரூ.2,000 நோட்டுகளில் 98.08% திருப்பித் பெறப்பட்டுள்ளன என்று தனது அறிக்கையில் தெரிவித்தது.
அக்டோபர் 7, 2023 வரை அனைத்து வங்கிக் கிளைகளிலும் ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் மற்றும் அல்லது மாற்றுவதற்கான வசதி அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த வசதியானது அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாட்டி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புதுதில்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 19 அலுவலகங்களில் இன்னும் கிடைக்க பெறுகிறது.
பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நாட்டின் எந்த தபால் நிலையத்திலிருந்தும் ரூ.2,000 நோட்டுகளை இந்தியா போஸ்ட் மூலம் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதே வேளையில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
0 Comments