பண்டிகை காலத்தால் விற்பனை அதிகரித்ததன் காரணமாக, கடந்த நவம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 8.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதில் ஒன்றிய ஜிஎஸ்டி வசூல் ரூ.34,141 கோடி, மாநில ஜிஎஸ்டி வசூல் ரூ.43,047 கோடி, ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி ரூ.91,828 கோடி மற்றும் செஸ் வரி ரூ.13,253 கோடி கிடைத்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.1.68 லட்சம் கோடி வசூலானது. இதற்கு முந்தைய மாதமான கடந்த அக்டோபரில் ரூ.1.87 லட்சம் கோடி வசூலானது.
0 Comments